போதை பொருள் ஒழிப்பு பள்ளிகளில் விழிப்புணர்வு
காஞ்சிபுரம்:மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில், ஆர்ப்பாக்கம் மற்றும் பெருநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம் உத்தரவுப்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மாவட்டம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, காஞ்சிபும் அடுத்த, ஆர்ப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெருநகர் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், போதை பழக்கத்தால் ஏற்படும், கொலை, கொள்ளை, கூடாநட்பு, போதைப் பழக்கத்திலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.