உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செம்பரம்பாக்கத்தில் நாளை விழிப்புணர்வு ஒத்திகை

செம்பரம்பாக்கத்தில் நாளை விழிப்புணர்வு ஒத்திகை

காஞ்சிபுரம்:செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றும்போது, ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து, விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நாளை நடைபெற உள்ளது.குன்றத்துார், சிறுகளத்துார், வழுதாலம்பேடு என அழைக்கப்படும் திருமுடிவாக்கம், வரதராஜபுரம், கொளுத்துவான்சேரி பகுதிகளில், ஒத்திகை நிகழ்வில் வருவாய், நீர்வளம், காவல், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் ஒலிப்பெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இது தொடர்பாக, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ஒத்திகை நிகழ்ச்சியினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஏதும் பாதிக்கப்படாது.மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் மிக அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 044 -- 27237107 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை