பிளாஸ்டிக் தவிர்க்க விழிப்புணர்வு
காஞ்சிபுரம்: பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க வேண்டும் என, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காஞ்சிபுரம் மாவட்ட கடைகள், வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் கவர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக, ஊராட்சிகள் தோறும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, வாலாஜாபாத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சுந்தரம் நேற்று கோவிந்தவாடி ஊராட்சியில் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.