கோ- கோ போட்டி படுநெல்லி முதலிடம்
காஞ்சிபுரம்:குறு வட்ட அளவிலான, கோ- கோ போட்டியில் படுநெல்லி தனியார் பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், வாலாஜாபாத் குறு வட்ட அளவிலான 19 வயது மாணவியருக்கான கோ- கோ போட்டிகள் நேற்று நடந்தன. வாலாஜாபாத் குறு வட்டத்தைச்சேர்ந்த, 20 பள்ளி மாணவியர் பங்கேற்றனர். இதில், படுநெல்லி ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு, உடற்கல்வி ஆசிரியர் பிரசாந்த் மற்றும் குறு வட்ட அளவிலான விளையாட்டுப்போட்டி செயலர் மற்றும் அவளூர் உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.