உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாசாரம்

மீண்டும் தலைதுாக்கும் பேனர் கலாசாரம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், பேருந்து நிலையம், காஞ்சிபுரம் சாலை, வந்தவாசி சாலை, எண்டத்துார் சாலை ஆகிய இடங்களில், அரசியல் கட்சியினர் விளம்பர பேனர் வைத்து வருகின்றனர்.இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. கடைகளை மறைத்து வைக்கப்பட்டுள்ள பேனர்களால், பொருட்களை வாங்க வரும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.எனவே, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை மதித்து, பேரூராட்சி அதிகார.ைகள் பேனர்களை அகற்ற முன்வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை