உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தரைப்பாலம் ஓரத்தில் தடுப்புகள் அவசியம்

தரைப்பாலம் ஓரத்தில் தடுப்புகள் அவசியம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமத்தில் இருந்து, புள்ளலுார் கிராமம் இடையே, விருதசீர நதி கடக்கிறது.இங்கு, வட கிழக்கு பருவ மழை மற்றும் பாலாற்றில் வெள்ளம் நீர் செல்லும் போது முழங்கால் அளவிற்கு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதுபோன்ற நேரங்களில், தரைப்பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, கணபதிபுரம் வழியாக புள்ளலுார், தண்டலம், புரிசை ஆகிய கிராம மக்கள் செல்ல வேண்டி உள்ளது. இந்த சாலையில், உயர் மட்ட தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.இதை ஏற்று, காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, 1.50 கோடி ரூபாய் செலவில், 24 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்திற்கு உயர் மட்ட பாலம் கட்டி வாகன பயன்பாட்டில் உள்ளது.இருப்பினும், புதிதாக கட்டிய தரைப்பாலம் ஓரம் போதிய தடுப்பு வசதி இல்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் கன ரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, பள்ளூர்-புள்ளலுார் இடையே கட்டிய தரைப்பாலம் ஓரத்தில் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ