உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

வேன் மோதி பைக்கில் சென்றவர் பலி

படப்பை:படப்பை அருகே உள்ள மகாண்யம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 53. அதே பகுதியில் உள்ள நர்சரி கார்டனில், செடி பராமரிக்கும் பணி செய்து வந்தார்.ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மகாண்யத்திற்கு, ஸ்பிளண்டர் பைக்கில், அன்பழகன் சென்றார்.ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் நெடுஞ்சாலையில், மலைப்பட்டு பகுதியை கடந்தபோது, அந்த வழியே சென்ற மினி வேன், பைக் மீது மோதியது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அன்பழகன், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை