கல் குவாரி அமைக்க எதிர்ப்பு பா.ஜ., ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில் தனியார் கல் குவாரி அமைக்க உள்ளதை எதிர்த்து, மாவட்ட பா.ஜ., சார்பில் எடமச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். அதில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கல் குவாரியை திறக்க கூடாது. கல் குவாரி திறப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை அழிக்கும் கல் குவாரியை அமைக்கக்கூடாது என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.