மழைநீர் கால்வாயை அடைத்து வாகனம் நிறுத்த பாதை
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, விட்டாவிடாகை பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, அப்பகுதியில் உள்ள வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், கால்வாயில் சிமென்ட் கற்களை கொட்டி அடைத்து, வாகனம் செல்ல வழி ஏற்படுத்தி உள்ளார். இதனால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழை காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது.எனவே, மழைநீர் கால்வாயில் அடைத்து, கொட்டப்பட்டுள்ள கற்களை அகற்றி, கால்வாயினை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.