உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலாற்றில் வாலிபர் சடலம் மீட்பு

பாலாற்றில் வாலிபர் சடலம் மீட்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் உள்ள கணேசன் நகரைச் சேர்ந்தவர் திலீப்குமார், 27. ஐ.டி.ஐ., முடித்த இவர், எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். கடந்த 25ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.அவரது தாய் அன்பழகி, காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், வளத்தோட்டம் அருகே பாலாற்றின் கரை பகுதியில் திலீப்குமார் சடலம் ஒதுக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். போலீசார் விசாரணையில், கடந்த 26ம் தேதி வரதராஜன் என்பவருடன் மது அருந்த சென்றது தெரியவந்தது.வரதராஜனிடம் விசாரித்ததில், 'கடந்த 26ம் தேதி பாலாற்றில் இருவரும் மது அருந்தியதாகவும், அப்போது இரவு உணவு வாங்க தான் சென்றுவிட்டு, மீண்டும் வந்து பார்த்த போது, திலீப்குமார் இல்லை' எனவும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிசு சடலம் மீட்பு

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அருகே, ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இங்கு, பச்சிளம் குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக, அவ்வழியே சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சிவகாஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், இரண்டு மாத சிசுவாக இருக்கும் எனக் கூறினர். சில நாட்களுக்கு முன், சிசு வீசப்பட்டிருக்கலாம் எனவும், இதன் காரணமாக சடலம் அழுகி ஆணா, பெண்ணா என தெரியாத நிலையில் உள்ளது.பிரேத பரிசோதனைக்காக, போலீசார் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை