மேலும் செய்திகள்
கரூரில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீட்பு
29-Oct-2025
தாமல்: பாலாறு வெள்ள நீரில் மூவர் மூழ்கியதில், ஒருவர் உயிரிழந்தார். இருவர் மாயமாகி உள்ளனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாமல் ஏரி நிரம்பி கலங்கல் வழியாக, 2,000 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரிகளில் ஆபத்தான முறையில் குளிக்க வேண்டாம் என, நீர் வளம் மற்றும் காவல் துறையினர் எச்சரிக்கை பதாகை அமைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று, ஏரியில் குளிக்க சென்ற தாமல் கிராமத்தைச் சேர்ந்த மணவாளன், 38. பாலா, 18. ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து உத்திரமேரூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்திரமேரூர் தீயணைப்பு வீரர்கள் பாலாவின் உடலை மீட்டனர். மணவாளன் உடலை தேடி வருகின்றனர். அதேபோல, ஓரிக்கை பாலாறு நீரில், நேற்று முன்தினம் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் மூழ்கினார். அவரின் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
29-Oct-2025