வரும் 31ல் புத்தக திருவிழா காஞ்சியில் நடத்த ஏற்பாடு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும், 'பபாசி' எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து, ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடத்துகிறது. நடப்பாண்டுக்கான புத்தக திருவிழா, வரும் 31ம் தேதி காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் நடத்த மாவட்ட நிர்வாகமும், பபாசியும் முடிவு செய்துள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. கலெக்டர் வளாகத்தில், புத்தக திருவிழாவுக்கான அரங்கு அமைப்பது, உணவு கடைகள், பார்க்கிங் வசதிகள், கழிப்பறை வசதி போன்ற முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் கலைச்செல்வி ஏற்கனவே ஆய்வு கூட்டம் நடத்தினார்.இதைத் தொடர்ந்து, இம்மாதம் இறுதியில் புத்தக திருவிழா நடத்த அனைத்து பணிகளையும் முடுக்கி விட்டுள்ளார். அதற்கான பணிகளை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.