உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கோவிந்தவாடியில் நுாலக வார விழா

 கோவிந்தவாடியில் நுாலக வார விழா

காஞ்சிபுரம்: கோவிந்தவாடி கிளை நுாலகத்தில், 58வது தேசிய நுாலக வார விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில் உள்ள கிளை நுாலகத்தில், 58வது தேசிய நுாலக வார விழா, வாசகர் வட்ட உறுப்பினர் கல்யாண ஜோதி தலைமையில் நேற்று நடந்தது. கோவிந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் விஜயகுமார், தமிழாசிரியர் அல்லி முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், மாணவ - மாணவியரின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் என பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பேனா, நோட்டுப்புத்தகம், பு த்தகங்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. நுாலகர் பூபதி நன்றி தெரிவித்தார்.  பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள நேரு நுாலக வளாகத்தில், 58வது நுாலக வார விழா, வாசகர் வட்ட குழுவின் தலைவர் பு.கந்தன் தலைமையில் நேற்று நடந்தது. நுாலகரும், வாசகர் வட்ட செயலருமா கலா வரவேற்றார். வாசகர் வட்ட முன்னாள் தலைவர் ராணி செல்வராஜ், எழுத்தாளர்கள் திருவிற்கோலம், சாந்தக்குமார், ராயல் மெட்ரிக் பள்ளி முதல்வர் காமகோட்டி ஆகியோர் நுாலகத்தின் சிறப்புகள் மற்றும் நுாலக வார விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து பேசினர். கருணாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ