மேலும் செய்திகள்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பந்தக்கால் நடும் விழா
30-Jan-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, பெருநகர் கிராமத்தில் பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சிம்ம வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சூரிய பிரபை ஆகியவற்றில் பிரம்மபுரீஸ்வரர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தைப்பூச திருவிழாவின் 7ம் நாளான நேற்று, காலை 10 : 00 மணிக்கு தேர்த்திருவிழா நடந்தது. முன்னதாக, அலங்காரம் செய்யப்பட்டு பிரம்மபுரீஸ்வரர் பட்டுவதனாம்பிகை தாயாருடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின், பூஜை முடிந்து தேர் சக்கரங்களில் பூசணிக்காய், எலுமிச்சை வைத்து தேங்காய் உடைக்கப்பட்டது. பின், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, கிராமத்தின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடந்தது. வரும் 11ல் பிரம்மபுரீஸ்வரர் பட்டுவதனாம்பிகை தாயாருடன் சேர்ந்து செய்யாற்றில் எழுந்தருளி, 25 கிராம சுவாமிகளோடு மகோன்னத காட்சி அளிக்க உள்ளார்.
30-Jan-2025