உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தெரு குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் குடிநீர் வீணடிப்பு

தெரு குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் குடிநீர் வீணடிப்பு

கீழ்கதிர்பூர்:கீழ்கதிர்பூரில் உடைப்பு ஏற்பட்ட தெரு குழாயை சீரமைக்காததால், ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது.காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு வேகவதி ஆற்றில் ஆழ்துளை குழாய் அமைத்து, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக வீடுகளுக்கும், தெரு குழாய் வாயிலாகவும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், பொன்னியம்மன் கோவில் தெருவில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெரு குழாய் ஒன்றின், குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக குடிநீர் நீரூற்றுபோல பீய்ச்சி அடித்து வீணாகி வருகிறது.எனவே, உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி