உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவ சேர்க்கைக்கு அழைப்பு: கலெக்டர்

செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் மாணவ சேர்க்கைக்கு அழைப்பு: கலெக்டர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், சதாவரம் பகுதியில் இயங்கும் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் நடப்பாண்டுக்கான மாணவ - மாணவியருக்கான சேர்க்கைக்கு அணுகலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளயிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம், சதாவரம் பகுதியில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில், 2025 - -26ம் கல்வியாண்டில் முன்பருவப் பள்ளி முதல், பத்தாம் வகுப்பு வரை இயங்கி வருகிறது.இப்பள்ளியில், 3 - 15 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் தங்கி பயிலும் வகையில் தனித்தனி விடுதி வசதியுடன் உள்ளது. இப்பள்ளியில் உள்ள சிறப்பாசிரியர்கள் செவித்திறன்குறையுடையோருக்கு கற்பிக்க சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களோடு பேச்சு பயிற்சியும் அளிக்கின்றனர்.பள்ளி விடுதியில் மாணவ - மாணவடியர்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச பயண சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், கணினி வழி கற்பித்தல், ஆண்டிற்கு ஒருமுறை சுற்றுலாவிற்கு அழைத்து செல்லுதல், மாணவ - மாணவியரின் விளையாட்டு திறனை அதிகரிக்க விளையாட்டு திடல் உடன்கூடிய பள்ளியாக உள்ளது.இப்பள்ளியில் சேர்க்கைக்கு அணுக. 044 -27267322 மற்றும் 95974 65717 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை