உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எழுத்துகலை பயிலரங்கம்

எழுத்துகலை பயிலரங்கம்

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ‛எழுதுக' இயக்கம் சார்பில், ஒரு நாள் நேரடி எழுத்துகலை பயிலரங்கம், நுாலகர் பூபதி தலைமையில் நேற்று நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் கோமதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் எழுத்துக்கலை பயிலரங்கை துவக்கி வைத்து பேசினார்.தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் புத்தகம் எழுதுவது குறித்து பேசினர்.மீனலோசினி அன்பழகன் கவிதை எழுதுவது குறித்து பேசினார். மாணவி சூரியபிரபா சிறுகதைகள் என்ற தலைப்பிலும், மாணவி அகல்விழி, கடிதம் என்ற தலைப்பிலும் பேசினர்.முன்னதாக மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கூஜாவின் சிறப்புகள் குறித்து அரசு அருங்காட்சியக பணியாளர் செல்வராஜ் விளக்கினார். எல்லை பாதுகாப்பு படை வீரரரும், ‛எழுதுக' இயக்க நிறுவனருமான கிள்ளிவளவன் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை