/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 120 பேருக்கு இதய மருத்துவ பரிசோதனை இதய மருத்துவ முகாம் 120 பேருக்கு பரிசோதனை
120 பேருக்கு இதய மருத்துவ பரிசோதனை இதய மருத்துவ முகாம் 120 பேருக்கு பரிசோதனை
ஏனாத்துார்:உலக இதய தினத்தையொட்டி, காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி, சங்கரா பல் நோக்கு மருத்துவமனை சார்பில், இலவச இதய மருத்துவ பரிசோதனை முகாம் வாலாஜாபாத் ஒன்றியம், நல்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நேற்று நடந்தது. இதில், மருத்துவர் சூரிய பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் இதய பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், கண், ரத்த அழுத்தம், சிறுநீரகம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நோயின் தன்மைக்கேற்ப மருந்து, மாத்திரை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில், 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் காஞ்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.