மேலும் செய்திகள்
டேபிள் டென்னிஸ் ரோசரி மெட்ரிக் பள்ளி வெற்றி
06-Nov-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வருவாய் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., ஆண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று நடந்தது.இப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 14 - 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட 36 குறுவட்ட அணிகள் பங்கேற்றன.இதில் மாணவர்களுக்கான 14 - 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அனைத்து விதமான போட்டிகளிலும் நாயகன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணி முதலிடம் பெற்று மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.போட்டிகள் அனைத்தும் காஞ்சிபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் முன்னிலையில் நடந்தது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி பரிசு வழங்கினார் மாநில அளவிலா போட்டியில் பங்கேற்க தகுதி வெற்றி பெற்ற நாயகன்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோரை தலைமையாசிரியர் சுப்பிரமணி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
06-Nov-2024