உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரதர் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்னை அதிகாரி கொடுத்த புகாரில் 4 பேர் மீது வழக்கு

வரதர் கோவிலில் வடகலை, தென்கலை பிரச்னை அதிகாரி கொடுத்த புகாரில் 4 பேர் மீது வழக்கு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், துாப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உத்சவத்தில், சோஸ்திர பாடல் பாடுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம், மந்திரபுஷ்பம் பாடுவதில் தென்கலை மற்றும் வடகலை பிரிவினரிடையே அண்மை காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் துாப்புல் வேதாந்த தேசிகரின், 757 வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மகோத்சம் கடந்த மாதம் 23ம் தேதி முதல் நடக்கிறது. இதில், 10வது நாள் உத்சவமான நேற்று முன்தினம் மாலை, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் நடந்தது. இந்த உத்சவத்தில், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும், வேதாந்த தேசிகர் முன், தாதாச்சாரியார்கள், வடகலை பிரிவினர் சோஸ்திர பாடல் பாடுவது மரபாக இருந்து வருகிறது. மங்களாசாசனம் உத்சவத்தின்போது வழக்கம்போல, வேதாந்த தேசிகர் முன் தாத்தாச்சாரியார்கள், வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடினர். அப்போது, தென்கலை பிரிவினரும் ஸ்தோத்திர பாடல் பாட முயன்றனர். இதனால், வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினரை சோஸ்திர பாடலை பாட எவ்வாறு அனுமதிக்கலாம் என, கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான ராஜலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர். தென்கலை பிரிவினர் கலைந்து சென்றனர். வழக்குப்பதிவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த வடகலை, தென்கலை பிரச்னையில், கோவில் உதவி ஆணையர் ராஜலட்சுமி, தன்னை தரக்குறைவாக பேசி, பணி செய்யவிடவில்லை என, விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வடகலை பிரிவினரை சேர்ந்த வாசுதேவன், நீடிலாக்ஷன், சீனிவாசன், கிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், ரமேஷ், 65. என்ற முதியவர், கோவில் உதவி ஆணையர் தன்னை தாக்கியதாக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். விஷ்ணுகாஞ்சி போலிசிலும், கோவில் ஆணையர் ராஜலட்சுமி மீது புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் நிர்வாக அறங்காவலரும், உதவி கமிஷனர் ராஜலட்சுமி கூறியதாவது: வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலை, வடகலை பிரச்னையை சிலர் வேண்டுமென்றே துாண்டி விடுகின்றனர். பிரசாத கடை ஒப்பந்தம் வெளி நபர் எடுத்த காரணத்தினால், முன்விரோதத்தால், இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புகின்றனர். அதிகாரி என்றும் பாராமல் என்னை தரக்குறைவாக பேசுகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ள கூறியும் சிலர் மதிப்பதாக இல்லை. அதனால் தான், போலீசில் புகார் அளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Indhuindian
அக் 04, 2025 07:47

Wish Dinamalar made enquiries about the incidents and reported the facts instead of report given by one side i.e the HR & CE. The A C i n defiance of the Court Orders and the order issued by her that the matter of Stotra Padam has been settled and the petition and appeal by the Tenkalais were dismissed, had taken the stand that she would revoke the order when the fesivities were going on. HR & CE commissioner should thoroughly investigate as to why the AC took such a stand and for what consideration? Only when the police confronted her asking her as to how she could overlook the order which the AC herself passed, the Tenkalais disappointed that their attempt to spoil the festivities and ruccus was spoiled left the place unnoticed. Some people even overheard her assugaing the Tenkalais that she would take care of them. Similar thing had late evening when she illegally and unauthorisedly prevented entry of Vadakalis from entering the sannadhi of Nammashwar saying that it was Tenkalai Sannadhi and Vadakalis should not enter which led to the ugly scene leading to her assaulting an elderly Vadakalai devotee. Even the police around asked her as to why she assaulted the devotee. Wish Dinamlar remains impartital and neutral whilst reporting such incidents.


சமீபத்திய செய்தி