உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 38 இடங்களில் சிசிடிவி பொருத்தம்

காஞ்சியில் 38 இடங்களில் சிசிடிவி பொருத்தம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 18வது வார்டில், 38 இடங்களில் வைக்கப்பட்ட, 'சிசிடிவி' கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்தன. காஞ்சிபுரம் மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட பேருந்து நிலையம், சேக்குபேட்டை, ஆஸ்பிட்டல் சாலை, வைகுண்டபுரம் உள்ளிட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்ற செயலில் ஈடுபடுவோரை எளிதில் கண்டறியும் வகையில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 18வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மல்லிகா ராமகிருஷ்ணன் தன் சொந்த செலவில் 38 இடங்களில் கேமராக்கள் அமைத்தார். புதிதாக அமைக்கப்பட்ட கேமராக்களை இயக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமை வகித்தார். அமைச்சர் காந்தி கேமராக்களை இயக்கி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !