உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வட்டார வளர்ச்சி நுழைவாயிலில் மோதிய சிமென்ட் லாரி

வட்டார வளர்ச்சி நுழைவாயிலில் மோதிய சிமென்ட் லாரி

ஸ்ரீபெரும்புதுார்: அரியலுாரில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சிமென்ட் மூட்டைகள் ஏற்றிவந்த லாரி, அலுவலக நுழைவாயில் சுவரில் நேற்று மோதியதில், ஆர்ச் உடைந்து விழுந்தது. அரியலுாரில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சிமென்ட் கிடங்கிற்கு, 200க்கும் மேற்பட்ட சிமென்ட் மூட்டைகளை ஏற்றிகொண்டு நேற்று காலை லாரி ஒன்று ஸ்ரீபெரும்புதுார் வந்தது. லாரியை காட்டு மன்னார்கோவிலைச் சேர்ந்த பாண்டிதுரை, 35, ஓட்டினார். காலை 6:15 மணிக்கு, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயில் கேட்டை திறந்து, லாரி உள்ளே செல்ல முற்பட்ட போது, எதிர்பாராத விதமாக லாரி வலது ஓரம் உள்ள சுவர் மீது மோதியது. இதில், நுழைவாயில் இரும்பு கேட் மற்றும் சுற்றுச்சுவர், நுழைவாயில் ஆர்ச் உள்ளிட்டவை இடிந்து விழுந்து சேதமானது. விபத்து குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை