உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புதர் காடாக மாறிய மயான எரிமேடை

புதர் காடாக மாறிய மயான எரிமேடை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பண்ருட்டி ஊராட்சியில், ஒரகடம் அருகே, கண்டிகை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், இறந்தவர்களை தகனம் செய்ய, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையோரம், மயான எரிமேடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த மயான வளாகத்தில், செடி, கொடிகள் புதர்போல் வளர்ந்துள்ளன. எரிமேடையின் மீதும் முட்செடிகள் வளர்ந்து உள்ளன. இதனால், சிமென்ட் எரிமேடையில் வேர்கள் படந்து, கான்கிரீட் சேதமாகி வருகின்றன. மேலும், இறந்தவர்களை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மயான வளாகம் மற்றம் எரிமேடையில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, சீரமைக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ