மேலும் செய்திகள்
பள்ளிகளில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்
15-Jan-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி துவங்கி, 100 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்றார். இதில், மாணவர்களின் படிப்பு திறனை மேம்படுத்துவது குறித்தும், பள்ளியின் வளர்ச்சி குறித்தும் பேசப்பட்டது. பின், பள்ளி மாணவியரின் பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Jan-2025