உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏகனாபுரம் நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா விமரிசை

ஏகனாபுரம் நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா விமரிசை

ஏகனாபுரம், மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியை செல்வி தலைமை வகித்தார். ஸ்ரீபெரும்புதுார் வட்டார கல்வி அலுவலர்கள், ஜெய்சங்கர், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.முன்னாள் மாணவர்கள், தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் தடவாளப் பொருட்களை அரசு பள்ளிக்கு வாங்கி கொடுத்தனர்.அதேபோல, மாணவ- - மாணவியருக்கு நோட்டு புத்தகம் வாங்கி கொடுத்தனர். மேலும், மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என, கல்வித் துறையினர் கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை