மேலும் செய்திகள்
கல்வி மாவட்ட அலுவலர்கள் நியமனம்
11-Oct-2024
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் நியமனம்
16-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், துணை கலெக்டர் நிலையிலான பதவிகளில் காலியாக இருந்த இரு பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமித்தும், இரு துணை கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, வருவாய் துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, சென்னை- - கன்னியாகுமரி தொழிற்தட திட்ட நில எடுப்பு துணை கலெக்டர் ஏழுமலை, நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக இருந்த மாநில வாணிப கழகத்தின் மாவட்ட மேலாளராக சுமதி என்பவரையும், கலால் பிரிவு உதவி கமிஷனர் பதவியிடத்திற்கு திருவாசகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.நீண்ட காலமாக காலியாக இருந்த கலால் பிரிவு உதவி கமிஷனர் பதவியிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி என்பவர், பரந்துார் ஏர்போர்ட் நில எடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட வழங்கல் அலுவலராக மதுராந்தகம் கோட்டாட்சியர் தியாகராஜன் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
11-Oct-2024
16-Oct-2024