உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துணை கமிஷனரிடம் ஆட்டை

துணை கமிஷனரிடம் ஆட்டை

சென்னை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை கமிஷனராக பணிபுரிந்து வருபவர் சுந்தர், 60. இவர், நேற்று முன்தினம் காலை எழிலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபோது, மொபைல் போன் 'வாட்ஸாப்'பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.அதில், உயரதிகாரி ஒருவர் வங்கி கணக்கு ஒன்றை அனுப்பி, 50,000 ரூபாய் அனுப்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அதை சரிபார்க்காமல், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார். பிறகு பணம் கேட்ட அதிகாரியின் மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியபோது, ஏமாற்றப்பட்டதைஅறிந்துள்ளார்.இது குறித்த புகாரின்படி அண்ணாசதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி