உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விருட்ச விநாயகர் கோவிலுக்கு சென்னை தம்பதியர் கோ தானம்

விருட்ச விநாயகர் கோவிலுக்கு சென்னை தம்பதியர் கோ தானம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல், உக்கம்பெரும்பாக்கம் ஏரிக்கரையில், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய, 27 ஸ்தல விருட்சங்கள் மற்றும் அதிதேவததைகளுக்கு தனித்தனி சன்னிதி அமைந்துள்ளது.இக்கோவில் பக்தர்களான சென்னையைச் சேர்ந்த தெய்வசிகாமணி - தமிழ்ச்செல்வி தம்பதியர், கன்றுடன்கூடிய பசு ஒன்றை, நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் நிர்வாகத்தினரிடம் நேற்று, ‛கோ' தானம் வழங்கினர். அதை தொடர்ந்து, தானமாக வழங்கப்பட்ட பசுவிற்கும், கன்றுக்கும் கோபூஜை நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை