உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லை அங்கன்வாடியில் குழந்தைகள் தவிப்பு

கழிப்பறைக்கு தண்ணீர் வசதி இல்லை அங்கன்வாடியில் குழந்தைகள் தவிப்பு

வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் ஊராட்சி, பாரதி நகரில் இயங்கும் அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு என, கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.இருப்பினும், கழிப்பறையை பயன்படுத்த குழாய் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், குழந்தைகள் கழிப்பறையை பயன்படுத்தும்போது, மைய ஊழியர்கள் பக்கெட்டில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், குழந்தைகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே, வையாவூர் ஊராட்சி, பாரதி நகரில் இயங்கும் அங்கன்வாடி மைய கழிப்பறைக்கு, குழாய் அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை