உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தாழ்வாக சென்ற மின் கம்பியில் கன்டெய்னர் உரசி கிளீனர் பலி

 தாழ்வாக சென்ற மின் கம்பியில் கன்டெய்னர் உரசி கிளீனர் பலி

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் வடகால் சிப்காட் சாலையில் தாழ்வாக சென்ற மின் கம்பியில் கன்டெய்னர் உரசியதில் கிளீனர் உயிரிழந்தார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உதய்பான் போசாமி, 45; கிளீனர். உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து, கன்டெய்னர் லாரியில் தொழிற்சாலை மூலப்பொருட்கள் ஏற்றிக் கொண்டு, இரு தினங்களுக்கு முன் ஸ்ரீபெரும்புதுார் வந்தார். கன்டெய்னரை உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிராஜ் போசாமி, 35, ஓட்டினர். இருவரும், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, பால்நல்லுாரில் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் கன்டெய்னரை நிறுத்திவிட்டு, தொழிற்சாலைக்கு செல்ல காத்திருந்தனர். நேற்று, காலை 6:00 மணிக்கு, கன்டெய்னரில் இருந்து கீழே இறங்கிய கிளீனர் உதய்பான் போசாமி, வாகனத்தின் பின்னால் சென்று கன்டெய்னரின் பின் பக்க கதவை தொட்ட போது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஓட்டுநர் கீழே இறங்கி வந்து பார்த்த போது, சிப்காட் சாலையில் தாழ்வாக உள்ள மின் கம்பியில், கன்டெய்னர் உரசியிருந்தது தெரிந்தது. ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ