உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரண்டு கோவில்களில் துாய்மை பணி

இரண்டு கோவில்களில் துாய்மை பணி

குன்றத்துார்:குன்றத்துாரில் உள்ள திருநாகேஸ்வரர் கோவில், கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்களில் ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் சார்பில், துாய்மை பணி நடந்தது. கோவில் வளாகம், குளத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருக்கயிலா வாத்தியங்கள் முழுங்க, திருமுறை ஈசனை சுமந்து, திருமுறைகள் பாடி, விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி 250க்கும் மேற்பட்டோர் குன்றத்துாரில் பேரணி சென்றனர். பின், கோவில் குளத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.தொடர்ந்து குன்றத்துார் அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோவில் குளத்தை சுத்தம் செய்து, உலக மக்கள் நலன் வேண்டி பன்னிருதிருமுறை பாராயணம் பாடி கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை