கலெக்டரின் நேர்முக உதவியாளர் அதிரடியாக விடுவிப்பு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக கோபி, 59, பணிபுரிந்து வந்தார். இவரை, நேர்முக உதவியாளர் பணியில் இருந்து, கலெக்டர் அதிரடியாக விடுவித்தார். இருப்பினும், அவரை பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட விஷயம் ரகசியமாக காக்கப்படுகிறது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது:கணக்குப்பிரிவு உதவி இயக்குநராக இருந்த போது, பல்வேறு முறைகேடுகள் செய்ததாக, அரக்கோணத்தில் இருக்கும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.இருப்பினும், தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, பணம் புழங்கும் சீட் வாங்கி மீண்டும் தனது விளையாட்டை துவக்கினார். ஓய்வு பெறவிருக்கும் இரு மாதங்களில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர். அந்த பணியிடத்திற்கு வேறு யாரையும் நியமிக்கவில்லை. கலெக்டரின் செயலுக்கு முறையான விளக்கம் அளித்து, மீண்டும் மாநில ஊரக வளர்ச்சி துறையில் இருந்து பணியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.