உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகார் பெட்டி: தி.மலை செல்ல பேருந்து வசதி தேவை

புகார் பெட்டி: தி.மலை செல்ல பேருந்து வசதி தேவை

தி.மலை செல்லபேருந்து வசதி தேவைஉத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற விசேஷ நாட்களில், உத்திரமேரூரில் இருந்து, மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.மேல்மலையனுார் மற்றும் திருவண்ணாமலை பகுதிக்கு, உத்திரமேரூரில் இருந்து நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால், சேத்துப்பட்டு, வந்தவாசி போன்ற பகுதிகளுக்கு சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து சென்று வரும் நிலை உள்ளது.எனவே, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் மேல்மலையனுார் மற்றும் திருவண்ணாமலை பகுதிக்கு, உத்திரமேரூரில் இருந்து, சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ். செல்வசேகர் புலிவாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ