உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம்

புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்த மின் கம்பம்

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அருகே, காரணித்தாங்களில் இருந்து பிரிந்து, பேரீஞ்சம்பாக்கம் செல்லும் பிரதான சாலை உள்ளது. தினமும், ஏராளமானோர் பல்வேறு வாகனங்களில் இந்த சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலையோரம் மின் வழித்தடம் செல்ல அமைக்கப்பட்டுள்ள, மின் கம்பங்கள் சில சிதிலம் அடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ள மின்கம்பங்கள், விழுந்து மின் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால், பாதசாரிகம் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க, படப்பை மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பெ. ராமசந்திரன்,பேரீஞ்சம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை