| ADDED : நவ 27, 2025 04:41 AM
உ த்திரமேரூர் அடுத்த மருதத்தில் சாலவாக்கம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள, பொதுகுளம் அருகே செல்லும் சாலை வளைவில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர், சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைத்துள்ளனர். தற்போது, பராமரிப்பு இல்லாததால், சாலையின் இருபுறமும் பல்வேறு செடிகள் வளர்ந்துள்ளன. இந்த செடிகள் அங்குள்ள தடுப்புகளை சூழ்ந்து உள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே, மருதத்தில் சாலையோர தடுப்புகளை சூழ்ந்துள்ள செடிகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- எம்.முனுசாமி, மருதம்.