உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அழிசூர் ஏரி கலங்கல் உடைந்து வீணாகும் தண்ணீரால் கவலை

அழிசூர் ஏரி கலங்கல் உடைந்து வீணாகும் தண்ணீரால் கவலை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் அழிசூர் கிராமத்தில், நீர்வளத்துறைக்கு சொந்தமான 120 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 150 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பல ஆண்டுகளாக ஏரி முறையாக பராமரிப்பு இல்லாமலும், கலங்கல் சேதமடைந்தும் இருந்தது. விவசாயிகள் பலமுறை ஏரியை சீரமைக்க, துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.'பெஞ்சல்' புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏரி நிரம்பியது. தற்போது, ஏரி கலங்கல் வழியே, கடந்த ஒரு வாரமாக உபரிநீர் வெளியேறி வந்தது. இந்நிலையில், சேதமடைந்த கலங்கல், நேற்று முன்தினம் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.இதுகுறித்து, துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். பின், நீர்வளத் துறையினர் மற்றும் விவசாயிகள் இணைந்து, மரக்கிளைகளை வைத்து கலங்கலை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தண்ணீரானது தொடர்ந்து வெளியேறி வருவது, விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ