பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் சகதி
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மலையாங்குளம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இப்பள்ளி வளாகத்தில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. இரு நாட்களுக்கு முன், பெய்த மழையின்போது, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியது.தற்போதும், தேங்கிவரும் மழைநீரால், பள்ளி வளாகம் சகதியாக உள்ளது.இதனால், மாணவ - மாணவியர் சகதியை தாண்டி பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. தொடர் மழை நேரங்களில், வளாகத்தில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே, பள்ளி வளாகத்தில், மழைநீர் வடிகால்வாய் அமைக்குமாறு,பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.