மேலும் செய்திகள்
பயணியர் நிழற்குடை கட்டும் பணி மும்முரம்
28-Sep-2025
வாலாஜாபாத்,:ஊத்துக்காடு பேருந்து நிறுத்தத்தில், 4 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிழற்குடை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில், புத்தகரம் மற்றும் சின்னிவாக்கம் பிரிந்து செல்லும் கூட்டுச்சாலை பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அப்பகுதியினர் இப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இப்பேருந்து நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடை கட்டடம் பழுதடைந்ததை அடுத்து, புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் மற்றும் பயணியர் வலியுறுத்தி வந்தனர். அதையடுத்து, ஊராட்சி பொது நிதியின் கீழ், 4 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்டுமான பணி நடைபெறுகிறது.
28-Sep-2025