உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழவேரி பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.20 லட்சத்தில் வீடு கட்டுவது துவக்கம்

பழவேரி பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.20 லட்சத்தில் வீடு கட்டுவது துவக்கம்

பழவேரி:பழவேரி கிராமத்தில் குடிசை வீடுகளில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களுக்கு, அரசு சார்பில் கான்கிரீட் வீடு கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பழங்குடியின மக்கள், நீர்நிலை உள்ளிட்ட புறம்போக்கு நிலங்களில் ஓலை குடிசைகளில் வசித்து வருகின்றனர்.காற்று மழைக் காலங்களில் இம்மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இதை தவிர்க்க, அரசு சார்பில், பழங்குடியின மக்களுக்கு மனை பட்டா மற்றும் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படுகிறது. அதன்படி, உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில், 2024- - 25ம் ஆண்டு, 'ஜன்மன்' திட்டத்தின் கீழ், 20 குடும்பங்களுக்கு மனை பட்டா வழங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா, 5.7 லட்சம் ரூபாய் என, 1.14 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அப்பணிகள் முடிவுற்றதை அடுத்து கடந்த டிசம்பரில் திறப்பு விழா நடைபெற்றது.இந்நிலையில், அப்பகுதியில் விடுபட்ட மேலும் நான்கு பழங்குடி யினர் குடும்பங்களுக்கு தற்போது மனை பட்டா வழங்கப்பட்டு, 'ஜன்மன்' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா, 5.7 லட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 20.28 லட்சம் ரூபாயில் வீடு கட்டும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை