உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிதி விடுவிக்காததால் கட்டுமான பணி நிறுத்தம்

நிதி விடுவிக்காததால் கட்டுமான பணி நிறுத்தம்

உத்திரமேரூர்:-காரணி மண்டபத்தில் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணிக்கு நிதி விடுவிக்காததால் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், காரணை ஊராட்சி, காரணி மண்டபம் கிராமத்தில், ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது.இக்கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.பின், கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்தது. எனவே, ஊராட்சி கட்டடம் புதிதாக கட்ட ஊராட்சி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்டு, கடந்த டிசம்பரில் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.இதையடுத்து, 2024 --- 25ம் நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் ஊராட்சி கனிமவள நிதி திட்டத்தின் கீழ், 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜனவரியில் வேறொரு இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டது.தற்போது, ஊராட்சி கட்டடம் கூரை அளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை ஒரு தவணை நிதித்தொகை கூட விடுவிக்கப்படாமல் உள்ளது.இதனால், மேற்கொண்டு பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குறித்த நேரத்திற்குள் பணியை முடித்து, கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, ஊரக வளர்ச்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:காரணை ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, கட்டுமான பணிகள் கூரை அளவிற்கு சென்றுள்ளன. அதற்கான நிதியை விடுவிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.எனவே, இந்த வாரத்திற்குள் அனைத்து நிதியையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை