| ADDED : நவ 19, 2025 04:43 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில். 'கொரோனா' காலத்தில் நிறுத்தப்பட்ட மாலை நேர ஸ்பீடு போஸ்ட் சேவையை மீண்டும் துவக்க வலியுறுத்தி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனு விபரம்: காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில், காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரையிலும், மாலை 6:00 முதல், இரவு 8:00 மணி வரை, மாலை நேர விரைவு தபால் சேவை அளித்து வந்தது. இதனால், அனைத்து தரப்பினரும் இந்த சேவையை பயன்படுத்திக் கொண்டு வந்தனர். 2019ம் ஆண்டு, 'கொரோனா' காரணமாக மாலை நேர விரைவு தபால் சேவை நிறுத்தப்பட்டு, மீண்டும் துவக்கப்படாமல் உள்ளது. இதனால், மாலை 4:00 மணிக்கு மேல், அஞ்சலகத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், முக்கிய ஆவணங்கள் ஒரே நாளில் டெலிவரி செய்ய வேண்டிய வணிகர்கள் மற்றும் தனி நபர்களுக்கான மாலை 4:00 மணி என்ற 'கட் ஆப்' நேரம் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால், அதிக பணம் செலவழித்து கூரியரில் அனுப்புவதால், அஞ்சலகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே , காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில், 2019ல் கொரோனாவின்போது, நிறுத்தப்பட்ட மாலை 6:00 முதல், இரவு 8:00 மணி வரை நேர 'ஸ்பீடு போஸ்ட்' சேவையை மீண்டும் துவக்க கே ட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.