உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கே.கே.நகரில் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி சீல்

கே.கே.நகரில் சரவணா ஸ்டோருக்கு மாநகராட்சி சீல்

சென்னை,கே.கே.நகர் முதல் செக்டார் முதல் தெரு மற்றும்அண்ணா பிரதான சாலை சந்திப்பில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில், சரவணா ஸ்டோர் என்ற வணிக வளாகம் இயங்கி வந்தது. 2019ம் ஆண்டு மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டது.ஆனால், வாகன நிறுத்தம், இரண்டு, மூன்றாம் தள குடியிருப்பு பகுதிகளையும், வணிக தளமாக்கப்பட்டு உள்ளது. மொட்டை மாடியிலும், அனுமதியின்றி அறைகள் கட்டப்பட்டன.இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகள், 2022ம் ஆண்டு, கட்டட உரிமையாளர் ரத்தின குமார் என்பவருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். அவகாசம் முடிந்தும் அதே நிலை தொடர்ந்தது.இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டல உதவி கமிஷனர் முருகேசன், செயற்பொறியாளர் இனியன் தலைமையிலான அதிகாரிகள், வணிக வளாகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன், 'சீல்' வைத்தனர்.தற்போது, சரவணா ஸ்டோர் வணிக வளாகம் இயங்கி வந்த இடத்தில், அதற்கு முன் சரவணபவன் உணவகம் இயங்கி வந்தது.அப்போதும், அனுமதியின்றி இரண்டாவது தளம்கட்டியதால், கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 2017ம் ஆண்டு கட்டடத்திற்கு, 'சீல்' வைத்து உள்ளனர்.அதன்பின், அந்த கட்டடம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு உள்ளது. அதிலும் விதிமீறல் என, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ