மேலும் செய்திகள்
நாடக மேடை சீரமைப்பு
22-Jun-2025
குன்றத்துார்:குன்றத்துார் அருகே நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டியாபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன், தனது பசு மாட்டை, அதே பகுதியில் உள்ள காலி நிலத்தில், நேற்று முன்தினம் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.பின், அன்று மாலை வழக்கம் போல் மாட்டை வீட்டிற்கு அழைத்து வர சென்றபோது, பசு மாடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் மாடு கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று காலை எட்டியாபுரம் ஏரிக்கரையில், மாட்டின் பின்னங்கால்கள் கட்டப்பட்டு, ஆசன வாயில் ரத்தம் கசிந்தவாறு மாடு இறந்து கிடப்பது தெரிய வந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார், மாட்டின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மாட்டின் இறப்பிற்கு காரணமான மர்ம நபர்கள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.
22-Jun-2025