உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக சுவரில் விரிசல்

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக சுவரில் விரிசல்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், சேதமடைந்து வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ், 73 ஊராட்சிகளில் 186 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட கட்டடம், முறையாக பராமரிப்பு இல்லாமல் கட்டடத்தின் பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. மழை நேரங்களில் விரிசல் வழியே மழை நீர் கட்டடத்தின் உள்ளே வழிகிறது. இதனால், கட்டட சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதால், அலுவலக பணியாளர்கள் அச்சத்தோடு பணிக்கு வந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்து வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கட்டடத்தை சீரமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை