உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாற்றுத்திறன் ஆயத்த பயிற்சி மையத்தின் சுவரில் விரிசல்

மாற்றுத்திறன் ஆயத்த பயிற்சி மையத்தின் சுவரில் விரிசல்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், சேதமடைந்து வரும் மாற்றுத் திறன் ஆயத்த பயிற்சி மைய கட்டடத்தை சீரமைக்க பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறன் ஆயத்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் பார்வை குறைபாடு, மனநல குறைபாடு, செவித்திறன் குறைபாடு, பேச்சுத்திறன் குறைபாடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, சிறப்பு பயிற்சியுடன் தசை பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடம், முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், கட்டடத்தின் பக்கவாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. மழை நேரங்களில் கட்டட விரிசல் வழியே மழைநீர் வழிந்து, கட்டடத்தின் உள்ளே சொட்டுகிறது. மேலும், கட்டடத்தின் மேல் அரச செடியும் வளர்ந்து நாளுக்கு நாள், அதன் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் கருதி, சேதமடைந்து வரும் மாற்றுத்திறன் ஆயத்த பயிற்சி மைய கட்டடத்தை சீரமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி