சாலையில் சாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றம்
உத்திரமேரூர்:பெஞ்சல் புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், கடந்த 30ம் தேதி, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, பல்வேறு இடங்களில் சாலையோர மரங்கள் சாய்ந்தன.உத்திரமேரூர் - காஞ்சிபுரம் சாலையில், ஆணைப்பள்ளம், திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி ஆகிய இடங்களில், மா, புளியன் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.இதேபோன்று, உத்திரமேரூர் - புக்கத்துறை சாலை, மானாம்பதி சந்திப்பு ஆகிய பகுதி சாலைகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, சாலையில் சாய்ந்த மரங்களை ஆட்கள் வாயிலாக வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.