உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிமென்ட் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்

சிமென்ட் சாலை சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் பேரூராட்சி, சின்னநாரசம்பேட்டை தெருவில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை,இப்பகுதிவாசிகள் பயன் படுத்தி வருகின்றனர்.இந்த சாலை முறையாகபராமரிக்கப்படாததால், சேதமடைந்து சரிந்துள்ளது. இதனால், அவ் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில்சிக்கும் அபாயம் உள்ளது.மேலும், சரிந்த சிமென்ட் சாலையின் கான்கிரீட்கள், அருகிலுள்ள மழைநீர் வடிகால்வாயில் விழுந்துஉள்ளது. இதனால், வீடுகளிலிருந்து வெளியேறும்கழிவுநீர், வடிகால் வாயில்செல்லாமல், அங்கேயே தேங்கி நிற்கிறது. தேங்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், பேரூராட்சி நிர்வாகம் தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, சேதமடைந்த சிமென்ட் சாலையைசீரமைக்க, பேரூராட்சிநிர்வாகம் உடனடியாகநடவடிக்கை எடுக்கவேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ