உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மானாம்பதி சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்

மானாம்பதி சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா அமைக்க, கிராமத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, 2018 --- 19ம் நிதி ஆண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது.தற்போது, சிறுவர் பூங்கா முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பூங்காவில் உள்ள இருக்கைகள் உடைக்கப்பட்டு, சுற்றுச்சுவர் ஓரமாக போடப்பட்டு உள்ளன.அதேபோல, ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் உடைந்து, சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி சிறுவர்களின் விளையாட்டு திறன் முற்றிலும் பாதிக்கும் சூழல் உள்ளது.மேலும், இரவு நேரங்களில் பூங்காவில் மின் விளக்குகள் எரியாததால், பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. எனவே, பராமரிப்பு இல்லாமல் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை