உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அருங்குன்றத்தில் சேதமடைந்த சாலை

அருங்குன்றத்தில் சேதமடைந்த சாலை

உத்திரமேரூர்:அருங்குன்றத்தில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.அருங்குன்றம் கிராமத்தில் உள்ள சாலவாக்கம் -- திருமுக்கூடல் சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.அருகிலுள்ள கல்குவாரி மற்றும் கிரஷர்களில் இயக்கப்படும் லோடு லாரிகளும் இச்சாலையில் செல்கின்றன. இந்த லாரிகள் தொடர்ந்து அதிக பாரங்களை ஏற்றிச் செல்வதால், அருங்குன்றம் பகுதியில் உள்ள தார்ச்சாலை சேதமடைந்து உள்ளது. அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, அருங்குன்றம் பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை