உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, மோட்டூர் கிராமத்தில் இருந்து, சிறுவாக்கம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை உள்ளது. இச்சாலையோரத்தில், ஐந்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்களில், மின் வழித்தடம் செல்கின்றன. இந்த மின்வழித் தடம், கைக்கு எட்டும் துாரத்தில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கிறது.இதனால், சிறுவாக்கம்சாலையோரத்தில், வைக்கோல் லாரி மற்றும்நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் போது, மின்வழித் தடத்தில் இருக்கும் கம்பி மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சாலையோரம்தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின் கம்பியை, மின்வாரிய அதிகாரிகள் இழுத்து கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ